Agriculture
||| | | | | |
அங்கக வேளாண்மை :: செயல்மிகு நுண்ணுயிரிகள்
 

வீரியம் மிக்க நுண்ணுயிரி

1.வீரிய மிக்க நுண்ணுயிரி என்றால் என்ன
2.வீரிய மிக்க நுண்ணுயிரியைக் கொண்டு தயாரிக்கப்படும் மட்கு எரு
3.வீரியம் மிக்க நுண்ணுயிரியை தயாரிக்கும் முறை

1.வீரிய மிக்க நுண்ணுயிரி என்றால் என்ன

நுண்ணுயிரிகள் ஒரு சிறிய கூறு அது மிகச் சிறியதாகக் காணப்படும். அவைகளை நாம் எளிதாக பார்க்க இயலும். சுற்றுப்புறவியலுக்கு சமநிலைப்படுத்துவது மிகக் கடினம். இவை இரசாயன முறை மற்ற நுண்ணுயிரிகளுக்கும், மனிதர்களுக்கும் வாழ உதவி புரியும். இவைகள் நுண்ணுயிரி உலகிற்கு தோழனாகும். இவை உபயோகமுள்ள நுண்ணுயிரிகளாகும். நோய்க்காரணிகள் கெடுதி விளைவிக்கும், மற்றும் நோய் அழுகல் மற்றும் மாசுகளை உருவாக்கும்.

வீரிய மிக்க நுண்ணுயிரின் தோற்றம்

1982 ல் டாக்கடர். ஷிகா, ரியூகியஸ் பல்கலைக்கழகம், ஒக்கினாவா ஜப்பான், புதிதாக நலம் பயக்கிற நுண்ணுயிரியை கண்டுபிடித்துள்ளார். இதில் உயிர்ப்பூட்டும் திறன், புணருத்தாரணம் மற்றும் பாதுகாக்கும் திறன் உள்ளது. இந்த குழுவிற்கு இவர் வீரிய மிக்க நுண்ணுயிரி என்று பெயரிட்டார்.

வீரிய மிக்க நுண்ணுயிரியைப் பயன்படுத்தி பூச்சி விரட்டி தயாரிக்கும் முறை

இந்தக் கலவை நச்சுத் தன்மை இல்லாத இரசாயன பூச்சி விரட்டி, தோட்டத்தில் உள்ள பூச்சிகள் மற்றும் நோய் பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்க உதவும். இது செடிகளுக்கு தடையரணாக இருந்து பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்கும். இந்தக் கலவையில் பூண்டு, மிளகு அல்லது சோற்றுக்  கற்றாலையை சேர்த்தால் பூச்சி விரட்டி மிகவும் பயனுள்ளதாக அமையும். இவைகளை சிறிது சிறிதாக நறுக்கியோ அல்லது மசித்தோ கலவையில் சேர்க்க வேண்டும்.

கலவைக்கு
வெது வெதுப்பான நீர் (க்ளோரின்) : 300 மி.லி.
வெல்லப்பாகுக் கழிவு: 50 மி.லி.
இயற்கை வினீகர்  : 50 மி.லி.      
விஸ்கி அல்லது எத்தில் ஆல்கஹால் : 50 மி.லி.
வீரிய மிக்க நுண்ணுயிரி திரவம்  : 50 மி.லி.

இதனைக் கலப்பதற்கு தேவையான அளவு கொள்கலனை தேர்ந்தெடுக்க வேண்டும். மூடி மற்றும் புனலுடன் கூடிய ப்ளாஸ்டிக் புட்டியில் சேமித்து வைக்கவும். வெல்லப்பாகுக் கழிவை வெது வெதுப்பான நீரில் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின் வினீகர், விஸ்கி மற்றும் வீரிய மிக்க நுண்ணுயிரியின் திரவத்தை சேர்க்கவும். இந்தக் கலவையை ப்ளாஸ்டிக் புட்டியில் சேர்த்து அதனுடன் சிறிதளவு நறுக்கிய பூண்டை சேர்க்கவும். முடிந்தளவு இறுக்கமாக முத்திரையிட்டு வெது வெதுப்பான இருட்டான இடத்தில் வைக்கவும். புட்டியில் வாயு உருவாகும் ஒரு நாளைக்கு இரண்டு முறை புட்டியின் மூடியைத் திறந்து வாயுவை வெளியேற்றவும். வாயு உருவாவது நின்று பழம் போன்று நறுமணம் வந்தால் வீரிய மிக்க நுண்ணுயிரி பயன்படுத்த தயாரிகிவிடும். கலவையை இருட்டான இடத்தில் ஒரே சீரான வெப்பநிலையில் மூன்று மாதங்கள் சேமித்து வைக்கவும். பூண்டு சாறு பயன்படுத்தினால் சேமித்து வைப்பதற்கு முன்பு அதனை வடிகட்டி விடவும். குளிர்ப்பதனப்பெட்டியில் சேமித்து வைக்கக் கூடாது.

வீரிய மிக்க நுண்ணுயிரியின் பூச்சி விரட்டிக் கலவையை பயன்படுத்தும் முறை

20 மி.லி. கலவையை 2 லிட்டர் சுத்தமான நீரில் கரைத்து தெளிப்பானில் கலக்கவும். பயிர்கள் ஈரமாகும் வரை கலவையை தெளிக்கவும். தெளிப்பானை விதை முளைப்பு அல்லது செடி முளைக்கும் போதோ மற்றும் பூச்சிகள் நோய்கள் தென்படும் 30 மி.லி. கரைசலை, 2 லிட்டர் தண்ணீரில் கலந்து வாரத்திற்கு ஒரு முறை காலையில் அல்லது கன மழையின் பின்பு தெளித்தால் நல்ல விளை பயனைக் காணலாம்.

வீரிய மிக்க நுண்ணுயிரி ஒரு இயற்கையான பொருள்

வீரிய மிக்க நுண்ணுயிரி ஒரு வணிக முத்திரை இந்த குறிப்பிட்ட கலவையை நலம் பயக்கிற உயிரிகளுக்கு பயன்படுத்தலாம்.
வீரிய மிக்க நுண்ணுயிரி உயிர் வளி நுண்ணுயிர் (உயிர் வாழ ஆக்சிஜன் தேவை) மற்றும் காற்றில்லாமல் வாழும் நுண்ணுயிரி (உயிர் வாழ ஆக்சிஜன் தேவையில்லை) இவை இரண்டும் இணைந்து பரிமாற்ற நலனை தருகின்றது (கூட்டு வாழும் முறை).
வீரிய மிக்க நுண்ணுயிரி மண்ணில் இருக்கும் நுண்ணுயிரிகளுடன் இணைந்துவிடும். இவை இணைந்து மண்ணின் தரத்தை உயர்த்தப்பயன்படும்.
வீரிய மிக்க நுண்ணுயிரிகள் நச்சுத் தன்மை அல்லது நோய்க் காரணிகள் இல்லாத ஒன்று. மனிதர்கள், விலங்குகள் மற்றும் சுற்றுப்புறங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்.

வீரிய மிக்க நுண்ணுயிரின் செயல்

தற்பொழுதைய ஆராய்ச்சி குறிப்பிட்டுள்ளது என்னவென்றால் வீரிய மிக்க நுண்ணுயிரியின் ஊட்டம் மண் மூலம் பரவும் நோய்க்காரணிகளை அடக்கி வைக்கும். அங்கக கழிவுகளை முடுக்கிவிடும் கனிம ஊட்டத்தை அதிகப்படுத்தும். இது செடிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் மற்றும் நலம் பயக்கிற நுண்ணுயிரிகளின் செயல்கள் அதிகமாகும்.
(எ.கா): மைக்கார்ஹிசா, காலக நிலையாக்க பாக்டீரியா, இதனால் இரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லியின் உபயோகத்தை குறைத்து விடும். வீரிய மிக்க நுண்ணுயிரி மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளின் பயனை அதிகப்படுத்தி கேடு விளைவிப்பதை முடக்கிவிடும்.

வீரிய மிக்க நுண்ணுயிரி திரவத்தை பயன்படுத்தும் முறை

செறிவூட்டப்பட்டது

தழை தெளிப்பான்

சுத்தமான தெளிப்பானை வைத்து வாரம் ஒரு முறை செடிகள் ஈரமாகும் வரை செடிகளின் மேல் நேரிடையாக தெளிக்கவும். இதை காலை வேலையில் அல்லது மாலையில் தெளிக்கவும். அப்பொழுது தான் நல்ல விளைப்பயனும், இலைகள் வாடாமலும் இருக்கும்.

மண்ணில் செயல்பாடு

மண்ணில் கரைசலை சொட்டு சொட்டாக விட்டு மண்ணை நனைக்கவும். முதிர்ந்த செடிகளுக்கு தகுந்தவாறு கரைசலை பயன்படுத்தவும். அங்கக பொருட்கள் உரங்களை மண்ணில் இடும் முன் வீரிய மிக்க நுண்ணுயிரியைக் கலந்து பயன்படுத்தவும்.

நிலத்தைத் தோண்டாமல் தோட்டப்பயிர் செய்வதற்கான முறை

ஓர் ஆண்டு களைச்செடி, புல் அல்லது மிச்சமான பயிர் வகைகளை குறைந்தது 5 செ.மீ. அளவிற்கு நிலத்தில் இருந்து வெட்டவும். பின் அதை மண்ணில் மூடாக்கு போட்டு நட்டவும். வீரிய மிக்க நுண்ணுயிரி திரவத்தை வாரம் ஒரு முறை மூடாக்கின் மேலும், செடியின் மேலும் தெளிக்கவும்.

உரத்தின் செயல்பாடு

உரக்குவியலை பயன்படுத்தினால் துர்நாற்றம் மற்றும் ஈக்களின் பிரச்சனை குறைந்து நல்ல தரமான வளர்ச்சியைக் கொடுக்கும். கை தெளிப்பானில் தெளித்தால் அதிகப்படியான உரக் குவியலின் ஈரப்பதத்தை குறைக்கலாம். இதனை அனைத்து வகையான புதிய பொருட்களின் மேலும் முடிந்தால் தெளிக்கலாம்.

தோட்டப்பயிர்களுக்கு பயன்படும் வீரிய மிக்க நுண்ணுயிரி

வீரிய மிக்க நுண்ணுயிரி திரவமாக இருக்கும் இந்நிலையில் உள்ள நுண்ணுயிரிகள் உயிருடன் இருக்கும் ஆனால் செயலற்று இருக்கும். இது ஆழ்ந்த பழுப்பு நிறத்தில் மிதமான வினீகர் புளித்த மாவின் போன்ற மனம் வீசும். திரவத்தின் காரநிலையின் அளவு 3.5 வீரிய மிக்க நுண்ணுயிரியை செயல்படுத்த அதை சுத்தமான க்ளோரின் இல்லாத நீரில் கரைத்து பயன்படுத்தவும். பின் வீரிய மிக்க நுண்ணுயிரின் கரைசல் மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தை உருவாக்கி மிதமான மனத்தைக் கொடுக்கும்.

எங்கே வீரிய மிக்க நுண்ணுயிரி திரவத்தை பயன்படுத்தலாம்

வீரிய மிக்க நுண்ணுயிரி திரவத்தை தழை தெளிப்பாக பயிர்களை நடவு செய்வதற்கு முன்பு பயன்படுத்தவும். அல்லது வளரும் பழங்கள், காய்கறிப்பயிர்கள் மற்றும் அலங்காரப் பயிர்களின் மேல் தெளிக்கலாம். தோட்டத்தில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தெளிக்கலாம் அல்லது உரக் குவியல் மட்டமான மண் இருக்கும் இடத்தில் தெளிக்கலாம்.

வீரிய மிக்க நுண்ணுயிரியை பயன்படுத்தும் முறை

க்ளோரின் இல்லாத சுத்தமான ஒரு லிட்டர் தண்ணீருடன் 5 மி.லி. வீரிய மிக்க நுண்ணுயிரி திரவத்தை கலந்து தோட்டத்தில் தெளிக்கவும். ஒரு சதுர மீட்டருக்கு ஒரு லிட்டர் என்ற அளவில் தெளிக்கவும். இது தான் பயன்படுத்துவதற்கு குறைந்தபட்ச அளவாகும். வீரிய மிக்க நுண்ணயிரியின் செயலை அதிகப்படுத்துவது எப்படி

  • 10 லிட்டர் தண்ணீர் குவளை
  • 10 லிட்டர் க்ளோரின் இல்லாத தண்ணீர் (தண்ணீரை 24 மணி நேரம் நீரில் உள்ள க்ளோரின் ஆவியாகும் வரை வைத்திருக்க வேண்டும்)
  • 10-20 மி.லி. செறிவூட்டப்பட்ட வீரிய மிக்க நுண்ணுயிரி
  • 10-20 மி.லி.செறிவூட்டப்பட்ட வீரிய மிக்க நுண்ணுயிரி
  • 10-20 மி.லி. சர்க்கரைப்பாகு

தேவைப்பட்டால் சர்க்கரைப்பாகு அல்லது கரும்பு சர்க்கரையை சிறிது சூடான தண்ணீரில் முதலில் சேர்த்து கலக்கவும். பிறகு சர்க்கரைப்பாகு அல்லது கரும்பு சர்க்கரையை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து நன்றாகக் கலக்கவும். செறிவூட்டப்பட்ட வீரிய மிக்க நுண்ணுயிரியை சர்க்கரைப்பாகு, தண்ணீர் கலவையுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும். வீரிய மிக்க நுண்ணயிரி சர்க்கரைப்பாகை உணவு மூலக்கூறாக எடுத்துக்கொண்டு விரைவாக செயல்படத் தொடங்கி விடும்.
கலவையை நேரிடையாக சூரிய ஒளியில் வைக்காமல் வெப்பமான இடத்தில் 1-2 மணி நேரம் வைத்தால் தான் வீரிய மிக்க நுண்ணுயிரி முழுவதுமாக தயாராகும். ஒரு சதுர மீட்டர் அளவிற்கு ஒரு லிட்டர் பயன்படுத்தவும். இந்தக் கரைசலை சேமித்து வைக்கக் கூடாது. இவைகளை குறைந்த நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.

வீரிய மிக்க நுண்ணுயிரியை மண்ணில் பயன்படுத்திய பின் வரும் பயன்கள்

கரிமங்களில் விலங்குகளின் உரம் மற்றும் உரங்களில் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இவை ஆரம்பத்தில் மண்ணில் இடும் போது நல்ல பயனைத் தரும். விரைவாக மண்ணில் முதலில் இருக்கும் நுண்ணுயிரியை மீறி இவை பயன்தரும் உரத்தில் உள்ள நுண்ணுயிரியின் பயன்கள் மிகக் குறைந்த நாட்களுக்கே. வீரிய மிக்க நுண்ணுயிரின் பயன்களும் இதைப் போன்றே. ஆனால் வீரிய மிக்க நுண்ணுயிரியின் பயன்கள் அதிக எண்ணிக்கையில் பயனுள்ள நுண்ணுயிரிகளை உருவாக்கும். அதனால் மண்ணில் அதிகக் காலம் இருக்கும்.
வீரிய மிக்க நுண்ணுயிரியின் பயன்கள் மண்ணில் மூன்று செயல்பாடுகளாக விரிவடையும் 8-10 நாட்கள் இடைவெளியில் நடவு நட்டிய பின் முதல் 3-4 வாரங்களில் பயன்தரும். இளம் நாற்றுகள் வறட்சி, வெப்பம், களை மற்றும் நோய் விளைவிக்கும் நுண்ணுயிரிகளை வீரிய மிக்க நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை இதனை தடுத்து பயிர்களை பாதுகாக்கும்.

வீரிய மிக்க நுண்ணுயிரி சீரிய வளர்ப்பு மற்றும் கரிமங்கள்

வீரிய மிக்க நுண்ணுயிரி சீரிய வளர்ப்பு சிறப்பாக பயன்பட உதவும். பண்ணைக் கழிவுகள் மற்றும் நகரக் கழிவுகளின் நாற்றத்தை குறைத்து, துரிதப்படுத்தும், வீரிய மிக்க நுண்ணுயிரி பண்படுத்துதல் என்றால் வீரிய மிக்க நுண்ணுயிரி பொக்காசி இதை உணவு கரிம உரமாக பயன்படுத்த உதவும் மற்றும் இதர உரம் தயாரிக்கும் பொருட்களுக்கு பயன்படுத்த உதவும். வீரிய மிக்க நுண்ணுயிரி பொக்காசி புளிக்கவைத்த உரம் இது மரத்தூள் மற்றும் கோதுமை தவிட்டினால் தயாரிக்கப்பட்டது.  சரியான முறையில் வீரிய மிக்க நுண்ணுயிரி தயாரானால் புளிக்க வைக்க முறைகள் தொடங்கி உணவு மற்றும் கரிமப்பொருட்கள்  உரமாக மாறிவிடும்.

மண் மற்றும் பயிர்களில் வீரிய மிக்க நுண்ணுயிரியின் பயன்கள்

வீரிய மிக்க நுண்ணுயிரியை அனைத்து வகையான மண் மற்றும் பயிர்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் நல்ல பயனுள்ள விளைவைத் தந்துள்ளது. இது மற்று மேலாண்மையுடன் மாற்றாக இருக்காது. வீரிய மிக்க நுண்ணுயிரி தொழில்நுட்பம் நல்ல மண்ணை தரும். பயிர் மேலாண்மையில் பயிர் சுழற்சி, உரம் உபயோகிப்பது, பயிர் மறுசுழற்சி மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது, இதை சரியாகப் பயன்படுத்தினால் வீரிய மிக்க நுண்ணுயிரி மண் வளத்தை அதிகரித்து பயிர்களின் வளர்ச்சி, பூ, பழங்கள் உருவாவது மற்றும் பழங்கள் பழுப்பதற்கு பயன்படும். பயிர்களின் மகசூலை அதிகப்படுத்தும் மற்றும் பயிர்களின் தரத்தை உயர்த்தி உதவும். மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அதிகமாகி மண்ணில் இருக்கும் நோய்களைக் கட்டுப்படுத்தும். நியூசுலாந்தில் இந்த வீரிய மிக்க நுண்ணுயிரிக்கு பையேர்கரோ அங்கீகரிக்கப்பட்ட அங்ககப் பொருளாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

களை, பூச்சி மற்றும் நோய்களுக்கு வீரிய மிக்க நுண்ணுயிரியின் பயன்கள்

வீரிய மிக்க நுண்ணுயிரி பூச்சிக்கொல்லி கிடையாது. இது கரியமற்ற இரசாயனமாகும். மண் மற்றும் செடிகளில் புதிதாக பயனுள்ள நுண்ணுயிரியைப் பயன்படுத்தும் போது இது பூச்சிகளைக் கட்டுப்படுத்தும். பூச்சி மற்றும் நோய் விளைவிக்கும் நுண்ணுயிரிகளை இயற்கை மூலம் நுண்ணுயிரிகளின் உதவியால் எதிர்த்து கட்டுப்படுத்திவிடும்.

2.வீரிய மிக்க நுண்ணுயிரியைக் கொண்டு தயாரிக்கப்படும் மட்கு எரு

வீரிய மிக்க நுண்ணுயிரியில் உணவு தரம் உயிர்வளி மற்றும் உயிர்வளியற்ற நுண்ணுயிரிகள்: ஒளிச்சேர்க்கை பாக்டீரியா, லேக்டோபேசில்லஸ், ஸ்ட்ரெப்டோமைசிட்ஸ், ஏக்டினோமைசிட்ஸ், ஈஸ்ட், நுண்ணுயிரிகளின் திரிபு பொதுவாக நுண்ணுயிரி வைப்பகத்தில் அல்லது சுற்றுப்புறத்தில் இருக்கும். 1999ல் ஏழு சிறு தொழில் அங்கக உரப்பிரிவுகளில் வீரிய மிக்க நுண்ணுயிரியைக் கொண்டு தயாரிக்கப்படுவதை மையான்மாரில் பயன்படுத்துகின்றனர். இதை நடத்துவது பெண்களின் வளர்ச்சிக் குழு. பிரிவில் 9 குழிகள் உள்ளன.  அவை 180 செ.மீ. (நீளம்) 120 செ.மீ.(அகலம்) 90 செ.மீ.(ஆழம்) இவைகளை அடி சுவர் மூலம் சுற்றிக் கட்டி, மேல் கூரை போட்டு இருக்கும்.

மூலப்பொருட்கள்

  • அங்கக உரம் தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள்
  • மாட்டு சாணம் - 2 பங்கு
  • நெல் உமி - 1 பங்கு
  • நெல் உமி - கரித்துண்டு - 1 பங்கு
  • நெல் தவிடு - 1 பங்கு
  • ஊக்கி - 33 லிட்டர் வீரிய மிக்க நுண்ணுயிரி கரைசல் அல்லது ட்ரைக்கோடெர்மா கரைசல் குழி

3.வீரிய மிக்க நுண்ணுயிரியை தயாரிக்கும் முறை

ஒரு லிட்டர் முதலில் தயார் செய்து வைத்திருந்த கரைசல் இதில் 10 மி.லி வீரிய மிக்க நுண்ணுயிரி கரைசல், 40 மி.லி. சர்க்கரைப்பாகு மற்றும் 950 மி.லி.தண்ணீர் சேர்த்து கலக்கவும். அதை வெப்பநிலையைப் பொருத்து 5-7 நாட்கள் வரை வைத்திருக்கவும். பின் அதில் 1 லி சர்க்கரைப்பாகு மற்றும் 93 லிட்டர்.  தண்ணீர் சேர்த்து 100 லிட்டர் வீரிய மிக்க நுண்ணுயிரி கரைசலை பயன்படத்த தயார் செய்யவும். இந்த அளவு மூன்று குழிகளுக்கு போதுமானது. இவை ஊக்கியாக பயன்பட்டு உரத்தின் காலத்தை மூன்று மாதத்தில் இருந்து ஒரு மாதமாகக் குறைந்துவிடும்.

செயல்முறை

ஊக்கியைத் தவிர அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகக் கலக்கவும். 15 செ.மீ. அளவு கலவையை குழிக்குள் பரவலாக ஊற்றவும். ஊக்கியை வைத்து தெளிக்க வேண்டும். இதே செயல்முறையை குழி நிரம்பும் வரை செய்யவும். ப்ளாஸ்டிக் தாளைக் கொண்டு குழியை மூடவும். இரண்டு அல்லது மூன்று வாரங்கள் கழித்து முழுக் குழியும் உயிர்வளியுள்ள உரமாக தயாராகிவிடும். இரண்டு வாரங்களுக்குப் பிறகு உரம் பயன்படுத்த தயாராகிவிடும். ஒரு தொகுதிக்கு ஒரு குழியில் 900 கிலோ வரை உருவாகும். பொதுவாக ப்ளாஸ்டிக் பைகளில் 30 கிலோ வரை மூட்டைக் கட்டப்படுகின்றன.  30 நாட்களில் ஒரு தொகுதிக்கு உருவாகும். அதில் 8 குழிகள் மட்டும் தொழில்நுட்பத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. வருடத்திற்கு உற்பத்தியின் அளவு 86.4 டன்கள் (0.9 டன்கள் X குழிகள் X 12 மாதங்கள்).

மூலப்பொருட்கள்

  • உரம் தயாரிப்பதற்கான தேவையான மூலப்பொருட்கள்
  • நெல் வைக்கோல்
  • பண்ணை வெளி உரம்
  • யூரியா உரம்
  • வீரிய மிக்க நுண்ணுயிரி கரைசல்

செயல்முறை

வைக்கோல் குவியல் 20 செ.மீ. உயரம், 1 மி அகலம் மற்றும் 5 செ.மீ. நீளம் என்ற அளவில் எடுத்து ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி குவியலாக உருவாக்கவும். ஒரு பகுதி குவியல் 5 மீ (நீளம் ) X1 மீ (அகலம்) X1 மீ (உயரம்) என்ற அளவில் இருக்கவும். குவியலின் மேல் தண்ணீரை தெளிக்கவும் அப்பொழுது தான் சமமான ஈரப்பதம் கிடைக்கும். இதைத் தொடர்ந்து உரத்தின் அடுக்கை 5 செ.மீ உயர்வுபடுத்தவும். பின் கைநிறைய யூரியாவை (100-200.) தெளிக்கவும். வீரிய மிக்க நுண்ணுயிரி கரைசலை மையான்மாரில் கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டை போலவே தயார் செய்யவும். அதை தெளித்தால் உயிர்வளியுள்ள உரமாக தயராகிவிடும்.
இந்த செயல்முறையை குவியல் 1 மீ உயர்வாக வரும் வரை தொடர்ந்து செய்யவும் பின் அதை ப்ளாஸ்டிக் தாளை வைத்து மூடி வைக்கவும். இந்தக் குவியல் இரண்டு வாரங்களில் திரும்பிவிடும் மறுபடியும் ஒரு வாரத்திற்குப் பின் திரும்பிவிடும். இரண்டு வாரத்திற்குப் பிறகு குவியல் குளிர்ந்தவுடன் குவியலின் உயரம் 70 செ.மீட்டராக குறைந்தவுடன் உரம் பயன்படுத்த தயாராகிவிடும்.


ஆதாரம்:
www.fao.org
http://www.ccc.govt.nz/